maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மேலும் உயர்வு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மேலும் உயர்வு

E-mail Print
Share/Save/Bookmark

indian parliamentபுதுதில்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மேலும் அதிகரிக்கப் பட்டு ரூ.60,000 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடிப்படை சம்பளமாக ரூ.16,000 பெற்று வந்தனர். கூட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ரூ.80,000 ஆக சம்பளத்தை உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அடிப்படை சம்பளத்தை ரூ.50,000 ஆக உயர்த்த கடந்த வாரம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கு பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. 

சம்பள விவகாரத்தில் முரண்டு பிடித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களை நேற்று (ஆக.22) மத்திய நிதியமைச்சர் சந்தித்து பேசினார்.அவர்களின் ஆதங்கத்தை மத்திய அரசு கவனத்தில் கொள்ளும் என அப்போது பிரணாப் முகர்ஜி உறுதியளித்தார்.

இந்நிலையில், ரூ.50,000 ஆக நிர்ணயிக்கப் பட்டிருந்த ஊதியத்தை, ரூ.60,000 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை இன்று (ஆக.23) ஒப்புதல் அளித்துள்ளது. அதன் படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலக செலவுகளுக்கான தொகையில் ஐந்தாயிரம் ரூபாயும், தொகுதி மேம்பாட்டு நிதியில் ஐந்தாயிரம் ரூபாயும் உயர்த்தப் பட்டுள்ளது. இதற்கான மசோதா இந்த வாரமே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

16 January 2012, 20.59 செய்திகள்
குஜராத்தும், தமிழ்நாடும் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகின்றன - நரேந்திர மோடி
சென்னை: காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஆட்சி புரியும்...மேலும்...
0 Comments , 48 Hits
22 September 2011, 13.33 செய்திகள்
சிதம்பரம் மிகவும்  நல்லவர் - காங்கிரஸ் சொல்லுகிறது!
புதுதில்லி: உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் 2ஜி ஸ்பெக்ட்ரம்...மேலும்...
0 Comments , 82 Hits
18 December 2011, 14.58 செய்திகள்
கேரளா மிரட்டலுக்கு அடிபணிந்தார் சிதம்பரம்
புதுதில்லி: முல்லைபெரியாறு அணை தொடர்பான தனது கருத்தை மத்திய உள்துறை...மேலும்...
0 Comments , 90 Hits

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits