அகமதாபாத்: பிரதமரே தரையை தொடைத்தாலும் காமன்வெல்த் போட்டிகளின் மைதானம் தயார் ஆகாது என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோடி கூறியதாவது:
“காமன்வெல்த் போட்டிகளில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. இப்பொழுது உள்ள நிலையை பார்த்தால், பிரதமரே தரையை தொடைத்தாலும், போட்டி மைதானம் தயார் ஆகாது போல் உள்ளது.
4 ஆண்டுகள் போராடியும், மைதானப் பணிகளை முடிக்க முடியாமல் திணறி வருகின்றனர் போட்டி ஏற்பாடு குழுவினர். அகமதாபாத்தில் போட்டிகள் நடப்பதாக இருந்தால், உரிய நேரத்தில் மைதானங்கள் தயார் ஆகியிருக்கும்.”
இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|






