புதுதில்லி: இந்தியா முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி இன்று (செப்.1) கொண்டாடப் படுகிறது.
இதனையொட்டி பிரதமர் மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:
"பகவான் கிருஷ்ணரின் வாழ்க்கையையும், கட்டுப்பாடு, அறிவு, சுயநலமற்ற தன்மை ஆகிய அவரது போதனைகளையும் கொண்டாடும் திருநாள் கோகுலாஷ்டமி.
அறியாமையையும் வறுமையையும், கல்வி மூலம் அகற்றி, அனைவரது வாழ்விலும் அமைதியும், வளமும் பொங்க இந்த நாள் வழி வகுக்கட்டும் என வாழ்த்துகிறேன்."
இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் தன் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|






