கடப்பா: ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் முதலாம் நினைவு தினம் இன்று (செப்.2) அனுசரிக்கப் படுகிறது.
ஆந்திர மாநிலம் சித்தூரில், கடந்த ஆண்டு இதே நாள் (செப்.2,2009) நடக்கவிருந்த அரசு விழாவில் பங்கேற்க ராஜசேகரரெட்டி ஹெலிகாப்டரில் சென்ற போது மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மலையில் மொதி நொறுங்கியது. இதில் ராஜசேகர ரெட்டி அகால மரணமடைந்தார். இந்த நிகழ்வு ஆந்திராவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ராஜசேகர ரெட்டியின் முதலாம் நினைவு தினம் இன்று (செப்.2) அனுசரிக்கப் படுகிறது. இதனையொட்டி, கடப்பா மாவட்டம் புலிவந்தலா அருகே அமைந்துள்ள ராஜசேகர ரெட்டியின் சமாதியில், அவரது மகனும், கடப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகன் மோகன் ரெட்டி இன்று காலை அஞ்சலி செலுத்தினார். அவருடன், அவரது தாயாரும் மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், சமாதி அமைந்திருக்கும் வளாகத்திலேயே இருக்கும் கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்த சிறப்பு பிராத்தனை கூட்டத்தில், ஜெகன் மோகன் ரெட்டியும், ராஜசேகர ரெட்டியின் ஏராளமான தொண்டர்ளும் பங்கேற்றனர்.
ராஜசேகர ரெட்டியின் ஆதரவாளர் ஏற்பாடு செய்திருந்த ஹெலிகாப்டர் மூலம், அவரது சமாதியில் மலர்கள் தூவப் பட்டன.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|





