maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் காமன்வெல்த் போட்டிகள்: அமெரிக்கா எச்சரிக்கை

காமன்வெல்த் போட்டிகள்: அமெரிக்கா எச்சரிக்கை

E-mail Print
Share/Save/Bookmark

india and USAவாஷிங்டன்: காமன்வெல்த் போட்டிகளை காண இந்தியா வர திட்டமிட்டிருக்கும் அமெரிக்க குடிமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிற நாடுகளுக்கு செல்லும் தங்கள் குடிமக்களுக்கு, அவ்வப்போது பாதுகாப்பு எச்சரிக்கை செய்திகளை பல நாட்டு அரசுகளும் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளைக் காண இந்தியா வரவிருக்கும் அமெரிக்கர்களுக்கு, அந்நாட்டு அரசு பாதுகாப்பு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. அதிக் கூறப் பட்டுள்ளதாவது:

"காமன்வெல்த் போட்டிகள் தொடர்பாக இது வரை எந்த தீவிரவாத அச்சுறுத்தலும் இல்லை. அப்படிப்பட்ட தீவிரவாத அச்சுறுத்தல் பற்றி அமெரிக்க அரசுக்கு தெரிய வந்தால், அமெரிக்க அரசு உடனடியாக மக்களுக்கு தெரியப் படுத்தும்.

காமன்வெல்த் போட்டிகளின் போது இந்தியா செல்ல திட்டமிட்டிருக்கும் அமெரிக்கர்கள், இந்தியா சார் அமெரிக்க அரசின் எச்சரிக்கை செய்தியை கவனமாக படித்து தெரிந்துக் கொள்ள வேண்டும். இந்த எச்சரிக்கை செய்திகளை www.travel.state.gov என்ற அரசு இணையதளத்திலும் படித்து தெரிந்துக் கொள்ளலாம்.

தீவிரவாத அச்சுறுத்தல்கள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் பெற, இந்தியாவில் தற்பொது இருக்கும் அல்லது இந்தியாவுக்கு செல்லவிருக்கும் அமெரிக்கர்கள், உடனடியாக, இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்வது அவசியம்."

இவ்வாறு அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 205 Hits