சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடப் போவதாக தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நிருபர்ளிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
கூட்டணி தொடர்பாக எந்தக் கட்சியும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. நாங்களும் எந்தக் கட்சியுடனும் பேசவில்லை. வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு சட்டப் பேரவைக்குள் நுழைவோம்.
6 மாநிலங்களில் 22 சேமிப்புக் கிடங்குகளில் பாஜகவினர் நடத்திய சோதனையில் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருள் வீணாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 11,700 டன் அரிசியும், கோதுமையும் வீணாகியிருப்பதை மத்திய அரசே ஒப்புக் கொண்டுள்ளது. வீணாகும் உணவுப் பொருள்களை ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை உடனே செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|





