சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் தமிழ் நாளிதழான தமிழ் முரசு தனது 75ம் ஆண்டு விழாவை இன்று (செப்.4) கொண்டாடியது.
சிங்கப்பூரில் மலாய் மொழி, சீன மொழி, ஆங்கிலத்திற்கு பிறகு நான்காவது தேசிய மொழியாக தமிழ் திகழ்கிறது. சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களிடையே தமிழ் முரசு நாளிதழ் (தமிழ்நாட்டில் வெளிவரும் மாலை பத்திரிகை அல்ல) மிகவும் பிரபலம்.
இந்த தமிழ் முரசு நாளிதழ் இன்று தன் 75ம் ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது.
இதற்கான நிகழ்ச்சி இன்று மாலை (செப்.4) சிங்கப்பூரில் நடந்தது. இதில் தமிழ் முரசு நாளிதழின் ஆசிரியர் முருகையன் நிர்மலா கூறுகையில், தமிழின் பழைய நாளிதழ்களில் ஒன்றான தமிழ் முரசு, சிங்கப்பூர் இந்தியர்களிடையே நம்பத் தகுந்த ஒரு நாளிதழாக திகழ்ந்து வருகிறது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சிங்கை வாழ் இந்தியர்கள் கலந்து கொண்டனர்.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|



