நாகப்பட்டணம்: கர்நாடகத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை பற்றி பரிசீலிக்கப் போவதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இருக்கும் நவக்கிரக தலங்களில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று (செப்.4) நாகப்பட்டணத்தில் எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தற்போது கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை தொடர்ந்தால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவதை பற்றி பரிசீலிக்கலாம். தற்போது என் தனிப் பட்ட பயணமாக தமிழகம் வந்துள்ளேன். இங்கு இருக்கும் நவக்கிரக தலங்களுக்கு செல்கிறேன். இரு மாநில மக்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்யவுள்ளேன் என்றார்.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|





