புதுதில்லி: காமன்வெல்த் போட்டிகள் ரத்து ஆனால் ரூ.750 கோடி இழப்பீடு, காப்பீடு நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் என தெரிகிறது.
அக்டோபர் 3 முதல் 14ம் தேதி வரை இந்தியாவில் காமன்வெல்த் போட்டிகள் நடைப்பெறவுள்ளன. இதில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்திருப்பதாக சர்ச்சைகள் நிலவி வருகின்றன. காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகளும் மந்த நிலையிலேயே உள்ளன.
இந்நிலையில், காமன்வெல்த் போட்டிகள் ரத்து ஆனால் காப்பீடு நிறுவனத்திடமிருந்து ரூ.750 கோடி இழப்பீடு கிடைக்கும் என தெரிகிறது.
இது குறித்து காமன்வெல்த் போட்டிகள் ஏற்பாடு குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,"தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாகவோ, ஒளிப்பரப்பு நிறுவனங்களுக்கு, கண்ணுருக் குறிப்பலை (Video Signal) கிடைக்காததாலோ, காமன்வெல்த் போட்டிகள் ரத்து ஆனால், ரூ.750 கோடி இழப்பீடு, காப்பீடு நிறுவனத்திடமிருந்து எங்களுக்கு கிடைக்கும்.
இதற்கான ஒப்பந்தத்தை இன்னும் நாங்கள் இறுதி செய்யவில்லை." என்றார்.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|



