நாசிக்: மராத்திய மாநில முதல்வர் அசோக் சவானின் இல்லத்துக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தவன் கைது செய்யப் பட்டுள்ளான்.
கடந்த வெள்ளிக் கிழமை (செப்.3) மராத்திய முதல்வர் அசோக் சவானின் அதிகாரப் பூர்வ இல்லமான 'வர்ஷா'வுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.
தொலைபேசியில் பேசியவன் தன்னை அல்-குவைதா இயக்கத்தின் உறுப்பினர் என்று அறிமுகம் செய்துக் கொண்டு, முதல்வரை பற்றி விசாரித்தான்.
இந்த தொலைபேசி அழைப்பு எங்கிருந்து வந்தது என போலீஸார் விசாரித்தனர். இதனையடுத்து, மலேகாவுன் பகுதியை சேர்ந்த அப்துல்லா ஷா (32) என்பவனை போலீஸார், துவாரகா பகுதியில் நேற்று (செப்.4) கைது செய்தனர். அவனிடமிருந்து 8 சிம் கார்டுகள் கைப்பற்றப் பட்டன. உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அப்துல்லா ஷாவை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|




