maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் ஜெயா டி.வி.க்கு மீண்டும் மிரட்டல் கடிதம்

ஜெயா டி.வி.க்கு மீண்டும் மிரட்டல் கடிதம்

E-mail Print
Share/Save/Bookmark

Jaya tvசென்னை: தா.கிருட்டிணன் கொலை குறித்த செய்தியை தொடர்ந்து ஒளிப்பரப்பி வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஜெயா டி.விக்கு, மீண்டும் ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இந்தக் கடிதம் குறித்து ஜெயா டி.வி. நிர்வாகம் சார்பில், அதன் செய்திப் பிரிவு துணைத் தலைவர் கே.பி.சுனில் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

ஜெயா டி.வி. அலுவலகத்துக்கு சில தினங்களுக்கு முன் ஒரு மிரட்டல் கடிதம் வந்திருந்தது. அதில், ஜெயலலிதாவின் பொது கூட்டம் மதுரையில் நடக்க கூடாது எனவும் அதை மீறி ஜெயலலிதா மதுரைக்கு வந்தால் குண்டு வைத்து கொல்லப் படுவார் எனவும் எச்சரிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் வைகை புயல் பாலு, மதுரை என்ற முகவரியிட்டு ஜெயா டி.வி.க்கு மீண்டும் ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.


இது குறித்து ஜெயா டி.வி செய்திப் பிரிவு துணைத் தலைவர் கே.பி.சுனில்  கூறியதாவது:

வைகைப் புயல் பாலு, மதுரை என்ற பெயரில் ஒரு மிரட்டல் கடிதம் எங்களது அலுவலகத்திற்கு வந்துள்ளது. அதில், தொடர்ந்து தா.கிருட்டிணன் கொலை வழக்கு தொடர்பாக செய்தி வெளியிட்டு வருகிறீர்கள். அந்த நிகழ்ச்சியை ஒளிப்பரப்புவதை உடனடியாக ஜெயா டிவி நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், இந்த செய்தியை அளித்த நபரும், அவரது குடும்பத்தினரும் கொடூரமாகக் கொல்லப்படுவார்கள்.

தொடர்ந்து தா.கிருட்டிணன் குறித்த செய்தியை ஒளிபரப்பி வந்தால் மதுரையில் தினகரன் நாளிதழுக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும். அதே விலையை ஜெயா டி.வியும் தர நேரிடும். மதுரைக்கு அடுத்த மாதம் வரும் தனது முடிவை ஜெயலலிதா வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இவ்வாறு மிரட்டல் கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளதாக சுனில் கூறியுள்ளார்.

இது குறித்து, காவல்துறை டிஜிபிக்கும் புகார் மனுவை அனுப்பியுள்ள ஜெயா டிவி, குற்றவாளியை உடனடியாக கைது செய்வதோடு, எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கும், ஜெயா டிவி அலுவலகத்திற்கும் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

இளங்கோவன் கண்டனம்:

ஜெயலலிதாவுக்கு மிரட்டல் கடிதங்கள் அனுப்பப் பட்டு வருவதற்கு காங். மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்செங்கோட்டில் இன்று (செப்.5) செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் மிரட்டல் வருவதாகவும், இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

 




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Sunday, 05 September 2010 15:45 )  


More and More


கிட்டதட்ட

22 October 2011, 21.19 தலைப்புச் செய்திகள்
மத்திய அரசின் மாற்றாந்தான் மனப்பான்மை: ஜெ. குற்றச்சாட்டு
புதுதில்லி: மத்திய அரசு, மாநில அரசுகளிடன் மாற்றாந்தாய்...மேலும்...
0 Comments , 141 Hits
30 December 2011, 18.11 செய்திகள்
சசிகலா நீக்கப் பட்டதற்கு பாராட்டு: அதிமுக செயற்குழு தீர்மானம்
சென்னை: கட்சியின் நலனுக்காக அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்...மேலும்...
0 Comments , 61 Hits
06 November 2011, 19.26 செய்திகள்
ஆசிரியை மரணம்: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
சென்னை: தி.நகரில் மழைநீர் வடிகால் கால்வாயில் தவறி விழுந்து...மேலும்...
0 Comments , 114 Hits

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits