சென்னை: பாஜக விற்கு ஓட்டு வங்கி ஒரு பொருட்டல்ல. என்றுமே அது மக்கள் நலனுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் மட்டுமே என்றும் போராடிவருகிறது. தமிழகத்தில் பாஜக சற்று பலமடைந்துள்ள நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று சட்டமன்றத்தில் நுழைந்தே தீரும் என தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுக் குறித்து பேட்டியளித்த அவர், ‘ தமிழகத்தில் பாஜக வலுவடைந்துள்ளது. அதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று சட்டமன்றத்தில் நுழைந்தே தீரும். மக்களுக்கு விலைவாசி உயர்வு, மின்நிறுத்தம் என பல அதிருப்திகள் உள்ளது. அதனால் எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு ஒரே அணியாக நின்று தேர்தலை சந்திக்க வேண்டும். தேர்தல் நெருங்கும் சமயத்தில் பாஜக கூட்டணி குறித்து முடிவெடுக்கும். கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜக வெற்றிப்பெறும் அளவிற்கு கட்சியை பலப்படுத்துவோம்.’ என கூறினார்.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|



