வேலூர்: தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரும் ஜனாதிபதியிடம் கருணை மனு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
கடந்த 2000ம் ஆண்டு கொடைக்கானல் ப்ளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் ஆங்காங்கே வன்முறையில் ஈடுப்பட்டனர். அப்பொழுது தர்மபுரிக்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மை கல்லூரி மாணவிகள் வந்த பேருந்துக்கு வன்முறையாளர்கள் தீ வைத்தனர்.
அதில் இருந்த அனைவரும் ஒருவாறு தப்பித்த நிலையில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்திரி என்ற மூன்று பெண்களும் தப்பிக்க இயலாமல் உயிருடன் தீயில் வெந்து கருகினர்.
இவ்வழக்கில் நெடுஞ்செழியன், முனியப்பன், ரவீந்திரன், ஆகிய மூவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அங்கேயும் அவர்களுக்கு தூக்குதண்டனை உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 3 பெண்களை ஈவு இரக்கமின்றி உயிருடன் எரித்துக் கொன்ற கொலைப் பாதகர்கள் தம் உயிர் மட்டும் வெல்லமெனக் கருதி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|





