திருச்சி: திருச்சியில் கட்டப்பட்டுள்ள புதிய கலெக்டர் அலுவலக கட்டடத்தை திறந்து வைப்பதற்காக இன்று (08/09/2010) காலை தமிழக முதல்வர் கருணாநிதி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் திருச்சி வந்தடைந்தார். ரயில் நிலையத்தில் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
12 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலக கட்டடத் திறப்பு விழா, மாநகராட்சி குடிநீர் விரிவாக்கம் தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள் இன்று (08/09/2010) காலை 10 மணிக்கு நடைப்பெறுகிறது. விழாவுக்கு துணை முதல்வர் ஸ்டாலின் தலைமைத் தாங்குகிறார்.
இவ்விழாவில் முதல்வர் கருணாநிதிரூ. 116 கோடி மதிப்பிலான புதிய கட்டடப் பணிகளை துவக்கி வைத்தும், ரூ. 192 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், இன்னும் பல நலதிட்டங்களையும் தொடங்கி வைத்து பேசுகிறார். நிகழ்ச்சியில் பல எம்.பி, எம்.எல்.ஏக்கள் கலந்துக்கொள்கின்றனர், கலெக்டர் சவுண்டையா வரவேற்கிறார். டி.ஆர்.ஓ ராமன் நன்றி கூறுகிறார்.
இவ்விழாவில் கலந்துக் கொள்வதற்காக இன்று (08/09/2010) அதிகாலை முதல்வர் திருச்சி வந்தடைந்தார். முதல்வரின் திருச்சி வருகையை ஒட்டி பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|



