திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே இன்று காலை (செப்.8) லாரி மீது பேருந்து மோதியதில், பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் உடல் கருகி பலி ஆயினர்.
இன்று காலை 5.30 மணியளவில் வேலூரிலிருந்து கடலூருக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. திருவண்ணாமலை அருகே மல்லவாடி அருகே இந்த பேருந்து சென்று கொண்டிருந்த போது, திருவண்ணாமலையில் இருந்து வேலூர் சென்று கொண்டிருந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் லாரி மற்றும் பேருந்தின் டீசல் டேங்குகள் வெடித்துச் சிதறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பயங்கர விபத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இந்தச் சம்பவத்தில் பஸ்ஸில் பயணம் செய்த 4 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். விபத்தில் லாரியின் டிரைவர், கிளீனர் ஆகியோரும் பலி ஆகினர்.
விபத்தில் காயமடைந்த 20 பேர் திருவண்ணாமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|



