maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் தமிழகத்தில் குடியரசு நாள் கொண்டாட்டம்

தமிழகத்தில் குடியரசு நாள் கொண்டாட்டம்

E-mail Print
Share/Save/Bookmark

Happy Republic Dayசென்னை: இந்தியாவின் 63-வது குடியரசுதின கொண்டாட்டம் சென்னையில் இன்று (ஜன.26) காலை சிறப்பாக நடந்தேறியது. தமிழக ஆளுனர் கே.ரோசைய்யா மூவண்ணக்கொடியை ஏற்றிவைத்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதா வீரதீர விருதுகளை வழங்கினார்.

முன்னதாக இன்று (ஜன-26)  காலை தமிழக ஆளுனர் ரோசையா தேசியக்கொடியை ஏற்றிவைத்து முப்படையினரின்  அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தமிழக காவல்துறையினரும், தீயணைப்புப் படையினரும் அவ்வமயம் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

அந்த கொடியேற்று விழா வைபவத்தில் தமிழக முதல்வர் வீரதீர செயல்களுக்கான விருதுகளை வழங்கினார். அண்மையில் சென்னையில் நடந்த தீவிபத்தில் மக்களின் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு தன்னுயிரை ஈந்த தீயணைப்பு வீரர் கே. அன்பழகனுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. காலம்சென்ற அன்பழகனின் மகள் வீரச்செயலுக்கான அண்ணா பதக்கத்தை முதல்வர் கையினால் பெற்றுக்கொண்டார்.

இந்திய ராணுவம், மர்றும் விமானப்படையினரின் ஊர்தி ஊர்வலமும், பள்ளி சிறுவர்களின் நாட்டிய நிகழ்ச்சிகளும் விழாவை சிறப்படையச் செய்தன.

சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை நடந்த குடியரசு தின விழாவில் பல முக்கிய பிரமுகர்களும், உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டு தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தினர்.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Thursday, 26 January 2012 11:05 )  


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits