புதுதில்லி: 2012-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் இன்று (ஜன-25) அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த 7 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.
2012-ம் ஆண்டுக்கான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகள் இன்று (ஜன-25) அறிவிக்கப்பட்டன.
இந்த ஆண்டு 109 பேருக்கு பத்ம விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் ஒப்புதல் அளித்துள்ளார். 5 பத்ம விபூஷண் விருதுகளும், 27 பத்ம பூஷண் விருதுகளும், 77 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்படுகிறது.
தமிழகத்தை சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், வாய்பாட்டுக் கலைஞர் டாக்டர் திருப்பூணித்துரா விஸ்வநாதன் கோபாலகிருஷ்ணன் மற்றும் சுப்பையா முருகப்பா வெள்ளையன் (வணிகம் மற்றும் தொழில்துறை) ஆகியோர் பத்ம பூஷண் விருதுகள் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் தமிழகத்தை சேர்ந்த நடேசன் முத்துசாமி (கலை/தியேட்டர்), டாக்டர் பி.கே.கோபால் (சமூகப் பணி), டாக்டர் விஸ்வநாதன் மோகன் (மருத்துவம் - சர்க்கரை நோய்) மற்றும் டாக்டர் வல்லார்புரம் சென்னிமலை நடராஜன் (மருந்தியல்- முதியோர் நலத்துறை) ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|



