சென்னை: கடுமையான மின்வெட்டு, காலாவதி மருந்து விவகாரம் ஆகியவற்றை கண்டித்து ஜூன் 7ம் தேதி தென்சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என அக்கட்சியின் பொது செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று (ஜூம் 5) ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை :
சென்னையில் அனைத்துப்பகுதிகளிலும் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது. சில சமயங்களில் இரவு நேரங்களிலும் இந்த மின் வெட்டு தொடர்கிறது.
தமிழ்நாடே இருளில் மூழ்கிக் கொண்டிருக்கின்ற இந்தச் சூழ்நிலையில், மக்களின் உயிருடன் விளையாடும் போலி மற்றும் காலாவதி மருந்துப் பொருட்கள் விற்பனை, காலாவதி மற்றும் கலப்பட உணவுப் பொருட்கள் விற்பனை ஆகியவற்றைக் கண்டு மக்கள் அதிர்ச்சியுற்றுள்ளனர்.
நல்ல, தரமான உணவுப்பொருட்களைக் கூட காசு கொடுத்து வாங்கி சாப்பிட முடியாத சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, சென்னை நகரில் அறிவிக்கப்படாத மின் வெட்டை அமல்படுத்தியுள்ள மைனாரிட்டி திமுக அரசைக் கண்டித்தும், காலாவதி மற்றும் கலப்பட உணவுப் பொருட்கள் விற்பனையை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், போலி மற்றும் காலாவதி மருந்து விற்பனையில் ஈடுபட்டுள்ள அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வலியுறுத்தியும், மின்வெட்டை சரி செய்ய வலியுறுத்தியும், தென் சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில் 7-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





