லண்டன்: ஆபாச இணையதளங்களுக்கு பிரத்தியேக பெயர் குறியீடு வழங்குவது குறித்து சர்வதேச அளவில் இணையதளங்களுக்கு பெயர்களை பதிவு செய்து வரும் இயக்கமான ICANN ஆலோசித்து வருகிறது.
இணையதளங்களை நல்ல விதமாக பயன் படுத்திக் கொள்வதை விட, அதை ஆபாச படங்களைப் பார்க்க பயன் படுத்திக் கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகம்.
மக்களின் இந்த மனப் போக்கை கருத்தில் கொண்டு, சில பிரபலமான தமிழ் இணையதளங்கள் கூட நித்தியானந்தா சல்லாப வீடியோவை அப்படியே இணையதளத்தில், வலையேற்றம் செய்துள்ளன. (மணியோசை.காம் அவ்வாறு செய்யவில்லை).
எப்பொழுது பார்த்தாலும் இணையதளத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் மகனோ மகளோ ஆபாச இணையதளங்களுக்கு அடிமை ஆகி விடுவார்களோ என்ற ஆதங்கம் பெற்றோர்களுக்கும் உண்டு.
இவற்றை கருத்தில் கொண்டு, ஆபாச இணையதளங்களுக்கு பிரத்தியேக பெயர் குறியீடு (domain) வழங்குவது பற்றி ICANN ஆலோசித்து வருகிறது.வழக்கமாக இருக்கும் .com , .in போன்ற பெயர் குறியீடுகளைப் போல, ஆபாச இணையதளங்களுக்கு மட்டும் .XXX என்ற பிரத்தியேக பெயர் குறியீடு வழங்கப் படுவது பற்றி ஆலோசிக்கப் பட்டு வருகிறது.
அதற்கான ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் பட்சத்தில் இந்த ஆண்டு இறுதி முதல் .XXX பெயர் குறியீடு விற்பனைக்கு வரும் என தெரிகிறது.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




