maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் எந்நேரத்திலும் சுனாமி தாக்கும் அபாயம்: உச்சக்கட்ட எச்சரிக்கையில் ஜப்பான், அமெரிக்கா

எந்நேரத்திலும் சுனாமி தாக்கும் அபாயம்: உச்சக்கட்ட எச்சரிக்கையில் ஜப்பான், அமெரிக்கா

E-mail Print
Share/Save/Bookmark

chennai tsunamiடோக்கியோ/ வாஷிங்டன்: சிலி நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து எந்நேரத்திலும் சுனாமி தாக்கலாம் என்ற பயத்தில் ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.

சனிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் சிலி நாட்டை உலுக்கியது. இதில் 300 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பயங்கர நிலநடுக்கத்தையடுத்து ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் சுனாமி பயத்தில் உறைந்துள்ளன.

ஜப்பான் கடற்கரை பகுதிகளை சுனாமி தாக்கக் கூடும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளதையடுத்து, கடற்கரையோரம் வாழும் சுமார் 70,000 பேர், பள்ளிகள், அரசு கட்டிடங்கள் போன்ற பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப் பட்டுள்ளனர்.

ஜப்பான் மக்கள் எக்காரணத்தைக் கொண்டும் கடற்கரைக்கு செல்லக் கூடாது என ஜப்பான் பிரதமர் யூகியோ ஹொட்டாயோமோ எச்சரித்துள்ளார்.அரசின் எச்சரிக்கை செய்திகள், ஜப்பான் தொலைக்காட்சி சேனல்களில் தொடர்ந்து ஒளிப்பரப்பப் பட்டு வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

1960ம் ஆண்டு, சிலி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் ஜப்பானில் 160 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

இதற்கிடையே, அமெரிக்க கடற்கரையோரங்களிலும் சுனாமி தாக்கக் கூடும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதால், அமெரிக்க மக்களை மிக கவனமாக இருக்கும் படி, அமெரிக்க அதிபர் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.

சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப் பட்டது:

இதற்கிடையே, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப் பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

12 April 2012, 12.51 தலைப்புச் செய்திகள்
இந்தோனேசியாவில் இயல்பு நிலை திரும்புகிறது
பண்டா அசே : இந்தோனேசியாவில் நேற்று (ஏப்.11) நிகழ்ந்த நிலநடுக்கத்தை...மேலும்...
0 Comments , 144 Hits
12 April 2012, 13.29 பொது கட்டுரைகள்
நிலநடுக்கம் ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்?
தமிழகத்தில் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்ற நிலை சில...மேலும்...
0 Comments , 129 Hits
28 February 2012, 18.24 தலைப்புச் செய்திகள்
தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த ஜெயலலிதா உறுதி : அமெரிக்க அமைப்பு பாராட்டு
சென்னை: தமிழ்நாட்டில் மிகச் சிறந்த மாற்றத்தை கொண்டு வர முதல்வர்...மேலும்...
0 Comments , 76 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits