சென்னை: சிங்கப்பூர் தேசிய நூலகத்தை மாதிரியாகக் கொண்டு, சென்னையில், 170 கோடி ரூபாய் செலவில், தமிழக அரசால் மிக பிரம்மாண்டமாக கட்டப் பட்டு வரும் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் வரும் ஜூன் மாதம் திறக்கப் படும் என தெரிகிறது.
இது குறித்து தமிழக கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செய்தி நிறுவன நிருபரிடம் கூறியதாவது:
“இந்த நூலகம் மிக புதுமையாக கட்டப் பட்டு வருகின்றது. சிங்கப்பூர் தேசிய நூலகத்தை முன் மாதிரியாகக் கொண்டு இந்த நூலகத்தை கட்டி வருகிறோம். கட்டுமானப் பணிகள் முடிந்து, ஜூன் மாதத்தில் திறக்க திட்டமிட்டுள்ளோம்.
இது வரை இந்த நூலகத்துக்கு 170 கோடி ரூபாயை அரசு செலவழித்துள்ளது. உலக பல்கலைக்கழகங்களில் இருந்து மின் இதழ்களை பெற யுனெஸ்கோவிடம் பேசி வருகிறோம்.”
இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




