பாட்நா: தேசிய இறையாண்மைக்கு எதிராக நடந்து வரும் சிவசேனாவையும், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியையும் தடை செய்ய, லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ராஜ் தாக்ரே, பால் தாக்ரே போன்ற மக்கள் விரோத சக்திகள் கைது செய்யப் பட வேண்டும் என பாஸ்வான் கூறியுள்ளார்.
பாட்நாவில் நிருபர்களிடம் பேசிய அவர், மேலும் கூறியதாவது:
”பால் தாக்ரேவும், பிகார் முதல்வர் நிதிஷ் குமாரும் ஒரு வகையில் சேர்வர். பால் தாக்ரே நாட்டில் பிரிவினையை ஏற்படுத்துகிறார். நிதிஷ் குமாரோ தலித் இனத்தை பிரிக்கிறார்.
நிதிஷ் குமார், தலித் முன்னேற்றத்திற்கு மத்திய அரசால் வழங்கப் படும் நிதியை சரி வர பயன் படுத்திக் கொள்ள தவறி விட்டார். இது குறித்து மத்திய அரசு விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும்.” என்றார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|


