மெல்போர்ன்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு சிவசேனா மிரட்டல் விடுத்திருக்கும் நிலையில், இந்தியாவில் மிகவும் கவனமாக இருக்க ஆஸ்திரேலிய வீரர்களை, ஆஸ்திரேலிய வீரர்களுக்கான ஐபிஎல் பாதுகாப்பு அதிகாரி பாப் நிக்கோல்ஸ் எச்சரித்துள்ளார்.
அண்மைக் காலமாக, ஆஸ்திரேலியாவில் இனவெறி காரணமாக இந்தியர்கள் அடிக்கடி தாக்கப் பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் ஆஸி. வீரர்கள் பங்கேற்க கூடாது. மீறினால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என சிவசேனா கட்சி எச்சரித்தது.
இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க இந்தியா வரும் ஆஸ்திரேலிய வீரர்கள் எவற்றை செய்ய வேண்டும், எவற்றை செய்யக் கூடாது என ஆஸ்திரேலிய வீரர்களுக்கான ஐபிஎல் பாதுகாப்பு அதிகாரி பாப் நிக்கோல்ஸ் எச்சரித்துள்ளார்.
அதில், யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் ஓட்டலை விட்டு வீரர்கள் வெளியேறக் கூடாது. வெளியே செல்லும் போது, ஆஸ்திரேலிய அணிக்கான சீருடை அணியக் கூடாது. ஆஸ்திரேலியர் என்பதற்கான அடையாள சின்னங்கள் எதையும் சுமந்து செல்லக் கூடாது என எச்சரிக்கப் பட்டுள்ளது.
இதே போன்ற எச்சரிக்கை பிப் 28 புதுதில்லியில் தொடங்கவிருக்கும் உலக கோப்பை ஹாக்கி போட்டிகளில் பங்கேற்கவிருக்கும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் அளிக்கப் பட்டுள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





