மும்பை: மகாராஷ்டிரா எல்லையிலுள்ள கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மராத்திப் பேசும் மக்கள் நிறைந்த கிராமங்கள் மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என மகாராஷ்டிரா கோரி வருகிறது. பெல்காம், நிப்பானி, கர்வார், பிதார், போன்ற பகுதிகள் இதில் அடங்கும்.
இதுக் குறித்து மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் கூறியதாவது,’ கர்நாடகாவில் மகாராஷ்டிர எல்லையில் கிட்டதட்ட 865 கிராமங்களில் மராத்தி மொழிப் பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியை உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும்.
கர்நாடகா மராத்தியர் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் தனது இஷ்டத்திற்கு நிறைய பெயர் மாற்றங்களை செய்து வருகிறது. இது மராத்தியர் அதிகம் வாழும் பகுதிகளில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று கூறினார். இதுக் குறித்து ஆலோசிக்க நாளை (14/07/2010) பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க இருக்கிறார்.
மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக் ராவும் ‘ பெல்காம் மகராஷ்டிராவை சேர்ந்தது.’ என அசோக் சவானுக்கு ஆதரவாகக் கூறியுள்ளார். மேலும் மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்தித்து இதுக் குறித்து பேச இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





