maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் 26 ஆண்டுகள் கழித்து போபால் விஷவாயு வழக்கில் தீர்ப்பு

26 ஆண்டுகள் கழித்து போபால் விஷவாயு வழக்கில் தீர்ப்பு

E-mail Print
Share/Save/Bookmark

bhopal gas tragedyபோபால்: போபாலில் விஷவாயு கசிந்து 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியான வழக்கில்26 ஆண்டுகள் கழித்து இன்று (07/06/2010) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் சேர்க்கப்பட்ட 8 பேர்களுக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை கேட்கும் ஆவலோடு பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் கோர்ட் வளாகத்தில் குழுமியிருந்தனர். அவர்கள் அனைவரும் தண்டனை தீவிரமாக இருக்கவேண்டும் என விரும்பினர். ஆனால் குற்றவாளிகளுக்கு 2 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை அளிக்கப்பட்டதில் கடும் அதிருப்தியடைந்தனர்.

1984ம் ஆண்டு மத்திய பிரதேச தலைநகர் போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் டிசம்பர் 2ம் தேதி நள்ளிரவில் விஷவாயுக் கசிந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பலர் பாதிக்கப்பட்டனர். இதில் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்நிறுவனத்தின் துணை மேலாளர் ராய் சவுத்ரி காலமாகிவிட்டார். அது மட்டுமின்றி இந்நிறுவனத்தின் தலைவர் அமெரிக்காவை சேர்ந்த வாரன் ஆண்டர்சன் அமெரிக்காவுக்கே தப்பியோடி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் போபால் மாவட்ட நீதிமன்ற நீதிபதி மோகன் திவாரி இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பு வழங்கினார். இது மட்டுமின்றி விபத்து ஏற்பட்ட யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்தார். மேலும் தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரும் ரூ 25 ஆயிரம் அபராம் செலுத்தி ஜாமீனில் வெளிவந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் இறங்கினர்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits