maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் மம்தாவின் நக்சல் ஆதரவு பேச்சு: நாடாளுமன்றத்தில் பாஜக எதிர்ப்பு

மம்தாவின் நக்சல் ஆதரவு பேச்சு: நாடாளுமன்றத்தில் பாஜக எதிர்ப்பு

E-mail Print
Share/Save/Bookmark

bjpபுதுதில்லி: மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி பேசிய பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கேள்விநேரத்தை ரத்து செய்து விட்டு, இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என அக்கட்சி நோட்டீஸ் வழங்கியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் லால்காரில் நேற்று (ஆக.9) நடந்த பேரணியில் மத்திய ரயில்வே அமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பங்கேற்று பேசினார். அதில், மாவோயிஸ்டு தலைவர் ஆசாத் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப் பட்டதற்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜியின் இந்த நக்சல் ஆதரவு பேச்சுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு மம்தா பானர்ஜியின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு பற்றி விவாதிக்க வேண்டும் என பாஜகவின் மாநிலங்களவை துணை தலைவர் அலுவாலியா நோட்டீஸ் அளித்திருந்தார்.

மாநிலங்களவை இன்று (ஆக.10) காலை கூடியதும், கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு, மம்தா பானர்ஜியின் சர்ச்சைக்குரிய பேச்சு பற்றி விவாதிக்க வேண்டும் என பாஜக மாநிலங்களவை தலைவர் அருண் ஜேட்லி கேட்டுக் கொண்டார். ஆனால், இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனையடுத்து மதியம் 12 மணி வரை மாநிலங்களவை ஒத்தி வைக்கப் பட்டது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

28 February 2012, 19.03 செய்திகள்
வேலைநிறுத்தம் நாட்டுக்கு நல்லதல்ல : மம்தா கருத்து
கோல்கத்தா : வேலைநிறுத்தங்கள் நாட்டுக்கு நல்லதல்ல என மேற்குவங்க...மேலும்...
0 Comments , 122 Hits
04 January 2012, 18.29 தலைப்புச் செய்திகள்
இடஒதுக்கீடு : மத்திய அரசு திடீர் முடிவு
புதுதில்லி: மத்திய அரசு பணிகளில் நிரப்பப் படாமல் இருக்கும்...மேலும்...
0 Comments , 126 Hits
08 February 2012, 18.29 செய்திகள்
சட்டசபையில் ஆபாச படம் பார்த்த விவகாரம் : 3 அமைச்சர்கள் பதவி விலகல்
பெங்களூரு : கர்நாடக சட்டசபையில், செல்போன் மூலம் ஆபாச படம் பார்த்த...மேலும்...
0 Comments , 128 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits