பெங்களூரு: சாமியார் நித்தியானந்தாவின் ஆபாச வீடியோ காட்சிகளை தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்ப தடை விதிக்கக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்கறிஞர் கே.என்.சுப்பார ரெட்டி தாக்கல் செய்துள்ள மனுவில், சாமியார் நித்தியானந்தா ஆபாச வீடியோவை டிவி சேனல்கள் ஒளிபரப்பு செய்வது சட்ட விரோதமாகும். மேலும், சன்னியாசி தர்மம் மீது நம்பிக்கைக் கொண்டுள்ள அனைவருமே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தக் காட்சிகளை தொலைக்காட்சிகள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி வருகின்றன. இதைப் பார்க்கும் இளைஞர்கள் தவறான பாதைக்கு இட்டுச் செல்லப்படுவர். குடும்பத்தோடு டிவி பார்க்கும்போது இந்தக் காட்சிகள் ஒளிப்பரப்ப படுவதால் குடும்பத்தினர் பார்க்க முடியாமல் தவிக்கும் நிலையும்
ஏற்படுகிறது.
எனவே இந்த ஆபாச காட்சிகளை டிவி சேனல்கள் ஒளிபரப்பு செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.தனது மனுவில் எதிர் மனுதாரர்களாக தலைமைச் செயலாளர், போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோரை அவர் கூறியுள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|






donot relay such type of visuval through tv chennel/if no control for that type ofl ive.
please save tamil kalasaram