சென்னை: இலங்கைக்கு இந்திய அரசின் சிறப்பு பிரதிநிதி ஒருவர் இந்த வாரம் செல்வார் என முதல்வர் கருணாநிதியிடம், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.
இலங்கையில், முகாம்களில் வாழும் தமிழர்களின் மறு சீரமைப்புக்கு இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கருணாநிதியிடம், உள்துறை அமைச்சர் சிதம்பரம் இன்று (ஆக 1) நேரில் சந்தித்து விளக்கினார்.
அப்போது முதல்வரிடம், இலங்கையில் நடந்து சீரமைப்பு பணிகளை பார்வையிட இந்திய அரசின் சிறப்பு பிரதிநிதி இந்த வாரம் இலங்கைக்கு செல்வார் என தெரிவிக்கப் பட்டது.தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப் படுவதை நிறுத்தவும் இந்திய அரசு, இலங்கை அரசை வலியுறுத்தி வருவதாக சிதம்பரம் முதல்வரிடம் தெரிவித்ததாக தெரிகிறது.
இது பற்றி ஏற்கனவே பிரதமர் மன்மோகன் சிங், கடந்த ஜூலை 22ம் தேதி முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத் தக்கது.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





