பீஜிங்: அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திபெத்தியத் தலைவர் தலாய் லாமாவை ஒபாமா சந்தித்தால் அமெரிக்க சீனா உறவு பாதிக்கப்படும் என சீன அமைச்சர் ஜுஹு வெய்குன் தெரிவித்துள்ளார். திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா இம்மாதம் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அவர் இந்த பயணத்தில் வாஷிங்டன்னுக்கும் செல்ல வாய்ப்பிருப்பதால் அமெரிக்க அதிபர் ஒபாமா தலாய் லாமாவை சந்திக்க வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பீஜிங்கில் செய்தியாளர்களை சந்தித்த சீன அமைச்சர் ஜுஹு வெய்குன், தலாய் லாமாவை அமெரிக்க அதிபர் ஒபாமா சந்திக்கக் கூடாது. அப்படி ஒருவேளை சந்தித்தால் அமெரிக்கா- சீனாவிடையே இருக்கும் அரசியல் உறவு பாதிக்கப்படும். இரு நாடுகளுக்குமிடையே ஒருக்கும் பரஸ்பர நம்பிக்கையும் ஒத்துழைப்பும் பாதிக்கப்படும் என்று கூறி அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




