புதுதில்லி: புதுதில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் முதலமைச்சர் மாநாடு இன்று (பிப்.6) நடந்தது. இதில் கலந்து கொண்ட குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசே காரணம் எனக் கூறியுள்ளார்.
இதற்கு பிரணாப் முகர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார். மோடிக்கும் - பிரணாப் முகர்ஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் முதலமைச்சர்கள் மாநாட்டில் சலசலப்பு ஏற்பட்டது.
முதல்வர் மாநாட்டில் மோடி பேசியதாவது: ”விலைவாசி உயர்வை தடுக்க மத்திய அரசு தவறி விட்டது. விலைவாசி உயர்வுக்கு பருவ மழைதான் காரணம் என மத்திய அரசு கூறுவது அபத்தம். 2000-2002ம் ஆண்டுகளில் (பாஜக ஆட்சி) பருவமழை பொய்த்த போதும், பணவீக்கம் 5 சதவீதமாகதான் இருந்தது.” இவ்வாறு மோடி தெரிவித்தார்.
இதற்கு பிரணாப் முகர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “நரேந்திர மோடி, விலைவாசி உயர்வை தேவையில்லாமல் அரசியல் ஆக்கி வருகிறார்.” என்றார்.
பின்னர் மோடி நிருபர்களிடம் பேசுகையில்,பிரணாப் முகர்ஜி தன்னை பேச விடாமல் குறுக்க குறுக்க பேசுவதாக தெரிவித்தார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





