maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் கொடநாட்டில் அனுமதியில்லாத தேயிலை தொழிற்சாலை?- விசாரணை ஆரம்பம்

கொடநாட்டில் அனுமதியில்லாத தேயிலை தொழிற்சாலை?- விசாரணை ஆரம்பம்

E-mail Print
Share/Save/Bookmark

jayalalithaஊட்டி: நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா பேரில் அனுமதியில்லாத தேயிலை தொழிற்சாலை நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, இதை விசாரிக்க அவசர அவசரமாக தமிழக அரசு நியமித்த ஒரு நபர் விசாரணை ஆணையம் தன் விசாரணையை இன்று (ஜூலை 3) தொடங்கியது. கொடநாட்டில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலை அனுமதியின்றி நடத்தப் பட்டு வருவதாக செய்திகள் வெளியாயின.இந்த விவகாரத்தில் அவசரப் பட்டு நடவடிக்கை எடுக்காமல் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப் போவதாக ஜூன் 28ம் தேதி முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார். இதனை விசாரிக்க, ஜூன் 29ம் தேதியே அவசர அவசரமாக ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரனை நியமித்தது தமிழக அரசு.

இந்த விசாரணை ஆணையம் இன்று (ஜூலை 3) தன் விசாரணையை தொடங்கியது.

இது குறித்து செய்தியாளர்களிடம் உதயசந்திரன் கூறுகையில், “நான் முதற்கட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளேன். ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறேன். விசாரணை நடத்த கொடநாடு எஸ்டேட்டுக்கும், கொடநாடு தேயிலை தொழிற்சாலைக்கும் செல்வேன்.” என்றார்.

கிராமப் புற மேம்பாட்டு துறை, நகர திட்டத் துறை, வருவாய் துறை உள்ளிட்ட அரசு துறைகளில் இருந்து உதயசந்திரன் ஆவணங்களை பெற்றுக் கொண்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

20 February 2012, 12.16 தலைப்புச் செய்திகள்
நடராஜன் கைது நாடகமே : கருணாநிதி கருத்து
திருச்சி: சசிகலா கணவர் நடராஜன் கைது செய்யப் பட்டிருப்பது நாடகமே என...மேலும்...
0 Comments , 146 Hits
28 April 2012, 12.55 செய்திகள்
புதுக்கோட்டை இடைத்தேர்தல் : திமுக நிலைப்பாடு குறித்து மே 17 அறிவிப்பு - கருணாநிதி
சென்னை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து மே 17ம்...மேலும்...
0 Comments , 32 Hits
03 April 2012, 12.53 தலைப்புச் செய்திகள்
தமிழகத்தில் வீடுகளுக்கான மின் கட்டணம் குறைப்பு
சென்னை: தமிழகத்தில் அண்மையில் உயர்த்தப் பட்ட வீடுகளுக்கான மின்...மேலும்...
0 Comments , 102 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits