புதுடெல்லி: 2010-2011ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று (26/02/2010) நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்கிறார். அத்தியாவசியப் பொருட்களின் விலை மிகவும் உயர்ந்துள்ள இந்நிலையில் விலைவாசிக் குறைய ஏதேனும் வாய்ப்பு உண்டா என்றும் வரிச்சலுகைகள் கிடைக்குமா என்ற ஆர்வத்துடன் மக்கள் இந்த பட்ஜெட்டை எதிர்பார்த்து வருகின்றனர்.
ஐக்கிய முற்போக்கு அரசு இரண்டாவது முறையாக சென்ற வருடம் மே மாதத்தில் பதவியேற்றது. அதைத் தொடர்ந்து ஜூலை மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்பொழுது பொருளாதார நெருக்கடிக் காரணமாக பல சலுகைகள் வழங்கப்பட்டது. ஆனால் இப்பொழுது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளக் காரணத்தினால் இந்த சலுகைகள் தொடர்ந்து நீடிக்குமா என்பதில் ஐயம் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க, இன்னும் ஓராண்டிற்காவது பொருளாதார ஊக்கச்சலுகைகள் நீடிக்க வேண்டும் என பல தரப்பினரும் விரும்புகின்றனர். மேலும் விலைவாசி உயர்ந்துள்ள இந்நிலையில் வரிகள் அதிகம் விதிக்கப்படமாட்டாது எனவும் நம்பப்படுகிறது.
அடுத்ததாக வருமானவரி உச்சவரம்பு அதிகரிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்பொழுது தனிநபர் வருமானவரி உச்சவரம்பு ரூ. 1லட்சத்து 60 ஆயிரமாக உள்ளது அது ரூ. 1லட்சத்து 80 ஆயிரமாக உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு ரூ. 1லட்சத்து 90 ஆயிரம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு ரூ. 2லட்சத்து 40 ஆயிரமாகவும் இருக்கிறது அது 10 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் வரை உயர்த்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





