maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் காங்கிரஸ் கட்சி சட்டமன்றத் தலைவர் சுதர்சனம் மரணம்

காங்கிரஸ் கட்சி சட்டமன்றத் தலைவர் சுதர்சனம் மரணம்

E-mail Print
Share/Save/Bookmark

sudarsanamகோவை: கோவையில் நடைபெற்று வரும் செம்மொழி மாநாட்டில் பங்கேற்றுக் கொள்ள கோவை சென்றிருந்த காங்கிரஸ் கட்சி சட்டமன்றத் தலைவர் டி.சுதர்சனம் மாரடைப்பால் காலமானார்.

கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க சென்றிருந்தார் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர் சுதர்சனம். இவருக்கு திடீரென நேற்று (ஜூன் 25) மாரடைப்பு ஏற்பட்டதால், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்  பட்டார். அவரை, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று உடல் நலம் விசாரித்தனர். முதல்வர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் சென்னையிலிருந்து மருத்துவர்கள் கோவைக்கு வரவழைக்கப் பட்டனர். சுதர்சனத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது.

இந்நிலையில், இன்று மாலை (ஜூன் 26) சிகிச்சை பலனின்றி சுதர்சனம் காலமானார். இதனைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.

சுதர்சனம் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் நின்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

29 December 2011, 18.21 செய்திகள்
தேசிய மாமனிதர் அந்தஸ்து லாலுவுக்கு வழங்கப் பட வேண்டும்: பாஜக கோரிக்கை
புதுதில்லி: தேசிய பறவை என மயில் அறிவிக்கப் பட்டிருப்பதை போல, தேசிய...மேலும்...
0 Comments , 161 Hits
05 February 2012, 18.16 செய்திகள்
விஜயகாந்த் இடைக்கால பதவிநீக்கம் : கருணாநிதி கண்டனம்
சென்னை: சட்டமன்றத்தில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இடைக்கால...மேலும்...
0 Comments , 164 Hits
05 January 2012, 20.41 தலைப்புச் செய்திகள்
சமஸ்கிருத மொழியை வளர்க்க மத்திய அரசு முயற்சி : பிரதமர் உறுதி
புதுதில்லி: சமஸ்கிருத மொழியை வளர்க்க மத்திய அரசு அனைத்து...மேலும்...
0 Comments , 120 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits