maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் தொடர் மின் வெட்டு: விழுப்புரத்தில் தேமுதிக ஆர்ப்பாட்டம்: விஜயகாந்த் அறிவிப்பு

தொடர் மின் வெட்டு: விழுப்புரத்தில் தேமுதிக ஆர்ப்பாட்டம்: விஜயகாந்த் அறிவிப்பு

E-mail Print
Share/Save/Bookmark

vijayakanthசென்னை: தமிழ்நாட்டில் நிலவி வரும் கடுமையான மின்வெட்டைக் கண்டித்து நாளை (ஜூன் 16)  விழுப்புரத்தில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: மின் உற்பத்தி அதிகரித்ததால் மாவட்டங்களில் மின்வெட்டு குறைக்கப்பட்டது என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அறிவித்த சில தினங்களிலேயே மீண்டும் ஏற்கனவே இருந்ததை விட கடுமையான மின்வெட்டை ஜூன் 3ம் தேதி முதல் மின்சார வாரிய அதிகாரிகள் அறிவித்தனர்.

ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 11 மணி நேரம் மின்சாரம் இல்லை. ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர். கேட்டால் காற்றாலை மூலம் வரவேண்டிய மின் உற்பத்தி `திடீரென்று' குறைந்து விட்டதாகவும், நீர் மின்சாரம் உற்பத்தி மழையை நம்பி இருப்பதனாலும் சுமார் 3,000 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்கின்றனர்.

வாழ்க்கைக்கு இன்றியமையாத மின்சாரம் எப்போது வரும்? எப்போது போகும்? என்று தெரியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, நாளை காலை,வாட்டி வதைக்கும் வரலாறு காணாத மின்வெட்டை அமல்படுத்தும் திமுக அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில், தேமுதிக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தும்.

இவ்வாறு தனது அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

03 February 2012, 12.44 தலைப்புச் செய்திகள்
விஜயகாந்த் பற்றி ஜெயலலிதா பேசியதில் தவறு இல்லை - அன்புமணி
கோவை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பற்றி முதல்வர் ஜெயலலிதா பேசியதில்...மேலும்...
0 Comments , 198 Hits
16 February 2012, 18.09 பொது கட்டுரைகள்
மின்சார சிக்கனத்திற்கு சில வழிகள்
மின் பற்றாக்குறை இன்று தமிழகத்தை வாட்டி வதைக்கிறது. சென்னையில் ஒரு...மேலும்...
0 Comments , 214 Hits
31 March 2012, 18.13 செய்திகள்
மின் கட்டண உயர்வு : கருணாநிதி கண்டனம்
சென்னை: மின்சார கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியிருப்பதற்கு திமுக...மேலும்...
0 Comments , 122 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits