புதுதில்லி : வலிமையற்ற லோக்பால் மசோதாவை தாக்கல் செய்து நாட்டை ஏமாற்ற வேண்டாம் என பிரதமருக்கு சமூக வேவகர் அண்ணா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார்.
அதே போன்ற தனிதனிக் கடிதங்கள் ராகுல் காந்தி, பாஜக தலைவர் நிதின் கத்காரி, உ.பி.,முதல்வர் மாயாவதி உள்ளிட்டோருக்கும் அண்ணா குழுவால் அனுப்பியுள்ளன.
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் அண்ணா ஹசாரே கூறியிருப்பதாவது:
' சோதா லோக்பால் மசோதாவை திரும்பப் பெற கொஞ்சமாவது துணிச்சல் காட்டுங்கள். அரசு தாக்கல் செய்திருக்கும் லோக்பால் மசோதா வலிமையானதா? எப்படி உங்களால் நாட்டை ஏமாற்ற முடிகிறது?
லோக்பால் சட்டத்தின் அதிகார வரம்புக்குள் சிபிஐயை கொண்டு வர மத்திய அரசு ஏன் தயங்குகிறது? அரசு பயப்படும் அளவு சிபிஐயிடம் ஏதாவது கோப்பு உள்ளதா? அல்லது ஊழல் அமைச்சர்களை காப்பாற்ற சிபிஐயை தவறாக பயன்படுத்தும் எண்ணம் உண்டா?
உங்களுக்கு 80 வயது ஆகி விட்டது. உங்களுக்கு மீண்டும் பிரதமர் ஆகும் வாய்ப்பை காங்கிரஸ் அளிக்குமா எனத் தெரியவில்லை. ஆனால், வலிமையான லோக்பால் சட்டத்தை கொண்டு வந்தால் இந்தியா என்றென்றும் உங்களை நினைவில் வைத்திருக்கும்.
இந்த நாடு உங்களுக்கு அனைத்தையும் கொடுத்து விட்டது. இனி நீங்கள் நாட்டுக்கு சிறிதளவாவது திரும்ப செலுத்த வேண்டும். அதற்கு நீங்கள் வலிமையான லோக்பால் சட்டத்தை துணிச்சலுடன் கொண்டு வர வேண்டும்.'
இவ்வாறு பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





