புதுதில்லி: நம் இந்தியாவின் பண்டைய காப்பியம் ராமாயணம். இது எத்தனை முறை படித்தாலும், கேட்டாலும், பார்த்தாலும் அலுக்காத காவியம். ஸ்ரீ ராமரையும், ராமாயணத்தையும் உள்ளூர் ஆசாமிகள் சிலர் திட்டி வரும் நிலையில், ராமாயணம் அமெரிக்காவில் பிரபலம் அடைந்து வருகிறது.
அங்கு ராமாயணத்தை மேலும் பிரபலப் படுத்தும், ஒரு முயற்சியை, நியூயார்க் மெட்ரோபாலிட்டன் கலை அருங்காட்சியகம் மேற்கொண்டுள்ளது.
“இந்தியா காப்பியம்: ராமாயணத்தில் இருந்து சில காட்சிகள்.” என்ற பெயரில் ஒரு பொருட்காட்சியை மார்ச் 31 முதல் செப்டம்பர் 19 வரை நடத்த நியூயார்க் மெட்ரோபாலிட்டன் கலை அருங்காட்சியகம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து நியூயார்க் மெட்ரோபாலிட்டன் கலை அருங்காட்சியகத்தின் செய்தி தொடர்பாளர் நவமி (அஷ்டமி, நவமி அல்ல!) தக்காஃபுச்சி கூறுகையில், “ இன்றைய நவீன உலகில், மக்கள் மனதில் ஏற்படும் சஞ்சலங்களுக்கு, பண்டைய புராணங்களில் விடை உள்ளது. குறிப்பாக ராமாயணத்தில் இருக்கும் கச்சிதமான கதை அமைப்பும், அது எடுத்துசொல்லும் நெறிமுறைகளும், இன்றைய தலைமுறையினர் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஒன்றாக திகழ்கிறது.” என்றார்.
வெளிநாட்டு காரனுக்கு தெரிந்தது கூட உள்ளூர் பிரகஸ்பதிகளுக்கு தெரியவில்லை போலும்!
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





