புதுதில்லி: போபால் விஷ வாயு சம்பவம் பற்றிய பிரதமர் அமைத்த அமைச்சர் குழுவின் அறிக்கை திங்கள் கிழமை இறுதி செய்யப் படும் என தெரிகிறது.
1984ம் ஆண்டு நடந்த போபால் விஷ வாயு கசிவு சம்பவம் 15000 பேரை பலிக் கொண்டது. இந்தியாவில் நடந்த மிகவும் கொடூரமான சம்பவத்தில் இதுவும் ஒன்று. இந்நிலையில், 26 ஆண்டுகளுக்கு பிறகு போபால் விஷ வாயு சம்பவத்தின் தீர்ப்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அண்மையில் வழங்கியது.
உயிர் பலியின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் அளித்த தண்டனை மிகவும் குறைவு என்ற கருத்து நாடு முழுவதும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மக்கள் கொந்தளிப்புடன் இருப்பதால், போபால் விஷ வாயு சம்பவத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு வழங்கப் பட வேண்டிய நிவாரணம், மறுசீரமைப்பு பணிகள், நீதிமன்ற தீர்ப்புக்கு அடுத்து சட்ட ரீதியாக செய்ய வேண்டிய செயல்கள் பற்றியெல்லாம் ஆராய்ந்து 10 நாட்களுக்குள் அறிக்கை பெற, மத்திய அமைச்சர் குழு ஒன்றை பிரதமர் உருவாக்கினார். இதன் தலைவராக மத்திய அமைச்சர் சிதம்பரம் நியமிக்கப் பட்டார்.
பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில், இந்த அமைச்சர் குழுவின் கூட்டம் இன்று மதியம் (ஜூன் 18) நடந்தது. இந்த அமைச்சர் குழுவின் இறுதி அறிக்கை வரும் திங்கள் கிழமைக்குள் இறுதி செய்யப் படும் என தெரிகிறது.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




