புதுடெல்லி: நக்சல்கள் அதிகம் உள்ள 7 மாநிலங்களை ஒருங்கிணைத்து ஒரு கூட்டுப்படை அமைக்க மத்திய அரசு யோசனைத் தெரிவித்துள்ளது. ஒரிசா, சட்டீஸ்கர், மேற்கு வங்கம்,
மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் நக்சல்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளதால் இம்மாநில முதலமைச்சர்களை இன்று (14/07/2010) பிரதமர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஜார்கண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடப்பதால் அம்மாநில ஆளுநர் கலந்துக் கொண்டார். மேற்கு வங்கத்திலிருந்து மூத்த அமைச்சர் கலந்துக் கொண்டார்.
இக்கூட்டத்தில் நக்சல்களின் அட்டகாசத்தைக் கட்டுக்குள் கொண்டு வர இந்த 7 மாநிலங்களையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டுப்படை அமைக்க வேண்டும் என மத்திய அரசு யோசனைத் தெரிவித்துள்ளது. இதற்கு ஓய்வுப் பெற்ற ராணுவ மேஜர் ஜெனரலைத் தலைவராக நியமிக்க வேண்டும் எனவும் ஆலோசிக்கப்பட்டது. நக்சல்களின் தொல்லையின்றி இம்மாநிலங்களுக்கு தேவையானப் பொருட்களை எடுத்து செல்ல ஹெலிகாப்டர் வழங்கப்படும் எனவும் நக்சல்களை ஒடுக்க ஆகும் செலவை மாநில அரசும் மத்திய அரசும் 80:20 விகிதத்தில் பகிர்ந்துக் கொள்ளும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





