இஸ்லமாபாத்: இந்தியா - பாக்கிஸ்தான் வெளியுறவு செயலாளர்களான நிருபமா ராவும், சல்மான் பஷீரும் இன்று (ஜூன் 24) பாக்கிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாடுகளுக்கிடையே நிலவும் நம்பிக்கை பற்றாக்குறையை நீக்கவும், தீவிரவாதத்தை எதிர்ப்பதில் இரண்டு நாடுகளும் சேர்ந்து செயல் படுவதற்காகவும் இந்த பேச்சு வார்த்தை நடத்தப் பட்டது.
நவம்பர் 2008ல் நடந்த மும்பை தாக்குதல் சம்பவம் பிறகு, இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி பாக்கிஸ்தான் செல்வது இதுவே முதல் முறை ஆகும். ஜூலை 15ம் தேதி நடக்கவிருக்கும் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்புக்கு, தகுந்த சூழ்நிலையை ஏற்படுத்துவதே இந்த சந்திப்பின் பிரதான நோக்கம் ஆகும்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




