வாஷிங்டன்: இந்தியா - பாக்கிஸ்தான் நல்லுறவால் உலக நாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவுக்கு நன்மை ஏற்படும் என அமெரிக்க அரசு கருத்து தெரிவித்துள்ளது. மேலும், 26/11 சம்பவம் தொடர்பாக இந்தியாவுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பாக்கிஸ்தானை, அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் க்ரோலி கூறுகையில், “இந்தியா - பாக்கிஸ்தான் இடையே நல்லுறவு நிலவ வேண்டியது மிக அவசியம். அவர்களுக்கு இடையேயான அமைதி நடவடிக்கைகள் நிற்காமல் சென்றுக் கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் நல்லுறவால், உலக நாடுகளுக்கு, குறிப்பாக, அமெரிக்காவுக்கு நன்மை ஏற்படும்.” என்றார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




