maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் சத்துணவு பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை கை விட வேண்டும்: ஜெயலலிதா வலியுறுத்தல்

சத்துணவு பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை கை விட வேண்டும்: ஜெயலலிதா வலியுறுத்தல்

E-mail Print
Share/Save/Bookmark

jayalalithaசென்னை: பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு பணியாளர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

விலைவாசி உயர்வினை சமாளிக்க முடியாமல், காலமுறை ஊதிய விகிதம், ஓய்வூதியம், பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சத்துணவு ஊழியர்கள் 2009-ம் ஆண்டு முதல் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 30.8.2010 அன்று கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்தது.

இதனையடுத்து, பெண்கள் உட்பட அனைத்து சத்துணவு ஊழியர்களும் இரவு நேரங்களில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையும் மீறி, 30-8-2010 அன்று சத்துணவு ஊழியர்கள் கோட்டையை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை, மெரினா கடற்கரை ஆகிய இடங்களிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை வாழ்த்த சென்ற அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு சங்க மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட பணி நீக்கம் மற்றும் இதர ஒழுங்கு நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

26 December 2011, 19.35 செய்திகள்
பிரதமருடன் கருணாநிதி சந்திப்பு : கனிமொழி உடனிருந்தார்
சென்னை: தமிழகம் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை, திமுக தலைவர்...மேலும்...
0 Comments , 215 Hits
16 January 2012, 20.45 தலைப்புச் செய்திகள்
புரட்சித் தலைவர் பிறந்தநாள் : தொண்டர்களுக்கு ஜெ. மடல்
  சென்னை: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 95வது...மேலும்...
0 Comments , 172 Hits
18 February 2012, 22.21 தலைப்புச் செய்திகள்
ஜெயலலிதா பெயரளவில்தான் பங்குதாரராக இருந்தார் : பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா தகவல்
பெங்களூர்: ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு ஜெயலலிதா செயல்படாத...மேலும்...
0 Comments , 171 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits