maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் மகளிர் இடஒதுக்கீடு மசோதா: ஜெ.பாராட்டு

மகளிர் இடஒதுக்கீடு மசோதா: ஜெ.பாராட்டு

E-mail Print
Share/Save/Bookmark

Jayalalithaசென்னை:மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப் பட்டுள்ளதை தான் பாராட்டிய தீர வேண்டும் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை ஒற்றுமையுடனும், ஒருமித்த கருத்துடனும் அரிய வகையில் நிறைவேற்றிக் கொடுத்த ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை நான் பாராட்டியே ஆக வேண்டும்.

இந்திய மரபு வழி பழக்க வழக்கங்கள், ஆண், பெண் இருபாலாரையும் எப்பொழுதும் சமமாகவே கருதுகிறது. இந்து மதத்தின் மிக உயர்ந்த கடவுள் அர்த்தநாரீஸ்வரராக, அதாவது பாதி பெண், பாதி ஆணாக சித்தரிக்கப்படுகிறார். சக்தி, சிவம் ஆகியவை ஒரு முழுப்பொருளின் முக்கிய இரு பகுதிகள்
என புராணங்கள் நமக்கு போதிக்கின்றன.

1960 களிலேயே ஒரு பெண்மணியை இந்தியப் பிரதமராக்கி நாம் பெருமைப்படுத்தினோம். இன்றைக்குக் கூட, ஒரு பெண்மணி தான் குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்.

மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்பது சிறியதொரு படியாக இருந்தாலும், இந்த மசோதா கடந்து வந்த பாதையைப் பார்க்கும் போது இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையே. இந்த மசோதா சட்டமாவதற்கு முன்பு மக்களவையில்
நிறைவேற்றப்பட வேண்டும்.

நான் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போது, மகளிருக்கு கிடைக்க வேண்டிய பங்கினை உறுதி செய்ய பாடுபட்டேன். தமிழகத்தில் அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் ஏற்பட நான் முக்கிய காரணமாக இருந்தேன். தாயின் பெயரையும் தலைப்பெழுத்தாக வைத்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டேன்.ஆணாதிக்கம் நிறைந்த சமூக அரசியல் அமைப்பில், மகளிருக்கு சமத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்வது முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு தான் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அ.தி.மு.க. தொடர்ந்து ஆதரித்து வருகிறது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா சட்டமாகிய பிறகு, மாநில சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பொறுப்புகளை ஏற்கக கூடிய மனோதிடமும், திறமையும் பெண்களுக்கு அவசியம். எனவே, எதிர்காலத்தில் பெண்கள் அரசியலில் ஆக்கப்பூர்வமான பங்கினை வகிக்கும் வகையில் தங்களை வளர்த்துக் கொள்ளவும், பண்படுத்திக் கொள்ளவும், பெண்களுக்கு பயிற்சி அளிக்க அ.தி.மு.க. தேவையான நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.

மகளிருக்கு அதிகாரம் அளித்தல், பாலின சமத்துவம், வலுவான மற்றும் நீள்மீட்சி இந்தியா ஆகியன அ.தி.மு.க.வின் நோக்கங்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

16 January 2012, 20.59 செய்திகள்
குஜராத்தும், தமிழ்நாடும் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகின்றன - நரேந்திர மோடி
சென்னை: காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஆட்சி புரியும்...மேலும்...
0 Comments , 173 Hits
27 January 2012, 18.29 செய்திகள்
ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக திமுக...மேலும்...
0 Comments , 248 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits