maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரி வாகனங்கள், சிடி பிளேயர்கள், இடைநிலை ஆசிரியர் பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்

மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரி வாகனங்கள், சிடி பிளேயர்கள், இடைநிலை ஆசிரியர் பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்

E-mail Print
Share/Save/Bookmark

karunanidhi giving job orders to handicapped

சென்னை: இரு கால்களும் பாதிக்கப் பட்ட 100 மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்க்கு பேட்டரியால் இயங்கும் இலவச மூன்று சக்கர வாகனங்கள், பார்வையற்ற 50 மாணவ, மாணவியர்க்கு இலவச குறுந்தகடு இயக்கிகள் (சிடி பிளேயர்) மற்றும் பாடங்கள் அடங்கிய குறுந்தகடுகள், கை,கால் பாதிக்கப்பட்ட 60 பேருக்கு இடைநிலை ஆசிரியருக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் கருணாநிதி இன்று (ஜூன் 10) வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மோட்டார் பொருத்தப் பட்ட மூன்று சக்கர வாகனங்கள் கோரி விண்ணப்பித்துக் காத்திருப்போர் பட்டியலிலுள்ள மாற்றுத் திறனாளி அனைவரும் பயன்பெறும் வகையில், 2009-10ம் ஆண்டிற்கு 1 கோடியே 70 லட்ச ரூபாய் செலவில் பேட்டரியினால் இயங்கும் 761 மூன்று சக்கர வாகனங்கள் வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி ஏற்கனவே ஆணையிட்டுள்ளார்.

இதில் முத்ற்கட்டமாக, சென்னை, காஞ்சிப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த 100 மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரி வாகனங்களை முதல்வர் கருணாநிதி இன்று (ஜூன் 10) வழங்கினார்.

இதே போல, கடந்த 3 ஆண்டுகளில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயின்ற 124 மாணவ மாணவியர்க்கு, 3 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் செலவில் பாடங்கள் அடங்கிய குறுந்தகடுகளும், குறுந்தகடு இயக்கிகளையும் வழங்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இதன் முதற்கட்டமாக 50 பேருக்கு குறுந்தகடு இயக்கிகளையும், குறுந்தகடுகளையும் முதல்வர் கருணாநிதி இன்று வழங்கினார்.

அதே போல, பூவிருந்தமல்லி அரசு பார்வையற்றோர்க்கான மேல்நிலை பள்ளி ஆசிரியர் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த 60 மாற்றுத் திறனாளிகளுக்கு, இடைநிலை ஆசிரியருக்கான பணி நியமன ஆணையை முதல்வர் கருணாநிதி வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இவ்வாறு தமிழக அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.






Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Thursday, 10 June 2010 19:29 )  


More and More


கிட்டதட்ட

06 January 2012, 20.58 செய்திகள்
புயல் நிவாரணம்: அதிமுக அரசுக்கு முழு ஒத்துழைப்பு - கருணாநிதி பேட்டி
சென்னை: தானே புயல் நிவாரண பணிகளில் அதிமுக தலைமையிலான தமிழக அரசுக்கு...மேலும்...
0 Comments , 143 Hits
26 December 2011, 19.35 செய்திகள்
பிரதமருடன் கருணாநிதி சந்திப்பு : கனிமொழி உடனிருந்தார்
சென்னை: தமிழகம் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை, திமுக தலைவர்...மேலும்...
0 Comments , 215 Hits
25 January 2012, 12.50 பொது கட்டுரைகள்
யார் இந்த மக்கள் நலப் பணியாளர்கள்?
இரண்டு மாதங்களாக தினமும் செய்திகளில் மக்கள் நலப் பணியாளர்கள் என...மேலும்...
0 Comments , 303 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits