சென்னை: தான் நிரபராதி என தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்குகளைப் பற்றியெல்லாம் கூட தேவையில்லாமல் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கும் கருணாநிதி தன்மீது வீண்பழி சுமத்துவதை விட்டுவிட்டு மக்கள் நலனில் அக்கறை செலுத்தினால் அனைவருக்கும் நலமாக இருக்கும் என அ இ அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார்.
தன்னை அரசியலில் இருந்து ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற நோக்கோடு தன்மீது போடப்பட்ட பொய் வழக்குகளை நீதிமன்றம் கவனித்துக் கொள்ளும். அதுப்பற்றி கருணாநிதி வீணாக கவலைப்பட்டு அறிக்கை விட்டுக்கொண்டிராமல் மக்களுக்கு ஏதேனும் பயனுள்ளதாக செய்யலாம்.
தமிழ்நாட்டில் விலைவாசி எக்கச்சக்கமாக கூடிவிட்டது. மக்கள் உபயோகிக்கும் அத்தியாவசிய பொருட்களான காய் கனிகள் பால், போன்ற பொருட்களின் விலை விண்ணைத் தொட்டு நிற்கிறது. சரித்திரத்தில் எப்பொழுதும் இல்லாத அளவு மின்வெட்டு இருக்கிறது. இதனால் தொழில்துறையும் வேளாண் துறையும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் பல்வேறு கொலைகள் நடந்துள்ளன. அந்தளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது.
தன்மீதான வழக்குகள் குறித்து அறிக்கை விடுவதை விட குடிநீர் பிரச்சினை, வேலையில்லா திண்டாட்டம் ஆகிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





