maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் மக்கள்நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மக்கள்நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

E-mail Print
Share/Save/Bookmark

highcourtசென்னை: மக்கள்நலப் பணியாளர்களை பணிநீக்கம் செய்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு உடனடியாக பணியாணை தரும் படி நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

1990ம் ஆண்டு திமுக அரசால் 25 ஆயிரம் மக்கள்நலப் பணியாளர்கள் நியமிக்கப் பட்டனர். அவர்களை நியமனம் செய்ததில் எந்த முறைகளும் கடைப்பிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. 1991ம் ஆண்டு அதிமுக ஆட்சி வந்ததும், மக்கள்நலப் பணியாளர்களை பதவியிலிருந்து நீக்கப் பட்டனர்.

பின்னர், 1996ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், 1997ல் மக்கள்நலப் பணியாளர்களுக்கு பணி வழங்கப் பட்டது. அதனை, 2001ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக ரத்து செய்து உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து 2006ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மக்கள்நலப் பணியாளர்கள் மீண்டும் பணியிலமர்த்தப் பட்டனர்.

கடந்த ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற அதிமுக, 13 ஆயிரம் மக்கள்நலப் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து  மக்கள்நலப் பணியாளர் சங்கங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. மக்கள்நலப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப் பட்டதற்கு இடைக்கால தடை விதித்து சில மாதங்களுக்கு முன் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை இன்று (ஜன.23) நடந்தது.

மக்கள்நலப் பணியாளர்கள் நியமனத்தில் பல தவறுகள் இருப்பதாகவும், எந்த இடஒதுக்கீடும் பின்பற்றப் படாமல் நியமனம் நடந்ததாகவும் அரசு தரப்பில் வாதிடப் பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மக்கள்நலப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப் பட்டது செல்லாது எனவும், அவர்களை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளவும் உத்தரவிட்டார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

10 April 2012, 19.09 செய்திகள்
தமிழ் புத்தாண்டு முதல் உழவர் பெருவிழா : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: தமிழ் புத்தாண்டு முதல் கிராமங்கள் தோறும், வேளாண்மை துறை...மேலும்...
0 Comments , 96 Hits
28 February 2012, 18.24 தலைப்புச் செய்திகள்
தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த ஜெயலலிதா உறுதி : அமெரிக்க அமைப்பு பாராட்டு
சென்னை: தமிழ்நாட்டில் மிகச் சிறந்த மாற்றத்தை கொண்டு வர முதல்வர்...மேலும்...
0 Comments , 76 Hits
27 January 2012, 18.29 செய்திகள்
ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக திமுக...மேலும்...
0 Comments , 248 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits