maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் வன்முறையை கைவிட்டு அரசுடன் பேச வாருங்கள்: மாவோயிஸ்டுகளுக்கு மம்தா அழைப்பு

வன்முறையை கைவிட்டு அரசுடன் பேச வாருங்கள்: மாவோயிஸ்டுகளுக்கு மம்தா அழைப்பு

E-mail Print
Share/Save/Bookmark

mamta banerjeeலால்கார்: வன்முறையை கைவிட்டு அரசுடன் பேச்சு நடத்த மாவோயிஸ்டுகள் முன் வர வேண்டும் என ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த மேற்கு மித்னாபூரில் பிரம்மாண்ட பேரணியில் பங்கேற்று பேசிய மம்தா பானர்ஜி கூறியதாவது:

’மாவோயிஸ்டுகள் வன்முரையை கை விட்டு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த முன் வர வேண்டும். மேதா பாட்கர், அக்னி வேஷ் ஆகியோர் மாவோயிஸ்டுகளை அமைதி பேச்சுவார்த்தைக்கு வற்புறுத்த வேண்டும். மாவோயிஸ்டு தலைவர் ஆசாத், காவல் துறையினரால் கொல்லப் பட்டிருக்க கூடாது. வன்முறை மூலம் அமைதியை நிலைநாட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை.
அமைதிக்கான முதல் படியை இன்றே எடுத்து வைப்போம். எங்கு, எப்படி பேசலாம் என்பதை மாவோயிஸ்டுகளே முடிவு செய்யட்டும். காவல் துறையை சேர்ந்தவர் இறந்தாலோ, பத்திரிகையாளர் இறந்தாலோ, அரசியல்வாதி இறந்தாலோ அனைத்தும் ஒன்றுதான். மரணத்தை வைத்து அரசியல் நடத்த நான் விரும்பவில்லை.

மேற்குவங்க மாநிலத்தில், 34 ஆண்டுகளாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆட்சி நடந்து வந்தாலும் பழங்குடியின மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலமாக பழங்குடியின மக்களுக்கு, ஆண்டுக்கு 12 நாட்கள் வேலையை மட்டுமே, மாநில அரசால் கொடுக்க முடிகிறது.

ஐக்கிய முக்கிய கூட்டணி அரசில் எங்களுக்கு (திரிணாமுல் காங்.) வெறும் 19 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். நாங்கள் சொல்வதையெல்லாம் மத்திய அரசு கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

மாவோயிஸ்டுகள் விவகாரத்தில் நான் என்ன தவறு செய்தேன் என சொல்லுங்கள் பார்க்கலாம். ஒரே ஒரு சம்பவத்தை சொன்னாலும் நான் பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக உள்ளேன்.’ இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

மாவோயிஸ்டுகள், மம்தா பானர்ஜிக்கு அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு  அண்மையில் கடிதம் எழுதினர் என்பது குறிப்பிடத் தக்கது.






Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

22 January 2012, 21.45 சம்பவம்
கோல்கத்தாவில் தீ விபத்து : 100 குடிசைகள் எரிந்து நாசம்
கோல்கத்தா : கோல்கத்தாவின் காளியாகாபூர் பகுதியில் உள்ள சேரியில்...மேலும்...
0 Comments , 90 Hits
13 April 2012, 18.20 செய்திகள்
மம்தாவை கேலி செய்யும் கார்ட்டூன் - ஷேர் செய்த பேராசிரியருக்கு அடி உதை
கோல்கத்தா: மம்தா பானர்ஜியை கேலி செய்யும் கார்ட்டூன் சித்திரத்தை...மேலும்...
0 Comments , 104 Hits
19 March 2012, 21.21 செய்திகள்
மத்திய ஆளும் கூட்டணியில் சமாஜ்வாதி ? - முலாயம் மறுப்பு
லக்னோ: மத்தியில் ஆளும் ஐ.மு.கூட்டணியில் சமாஜ்வாதி கட்சி சேராது என்று...மேலும்...
0 Comments , 63 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits