maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் காமன்வெல்த் தொடக்க விழா நடக்கவிருக்கும் மைதானத்தை பார்வையிட்டார் மன்மோகன் சிங்

காமன்வெல்த் தொடக்க விழா நடக்கவிருக்கும் மைதானத்தை பார்வையிட்டார் மன்மோகன் சிங்

E-mail Print
Share/Save/Bookmark

manmohan singhபுதுதில்லி: காமன்வெல்த் போட்டிகள் தொடங்க 35 நாட்களே உள்ள நிலையில், அப்போட்டியின் தொடக்க விழா மற்றும் ஆட்ட நிறைவு விழா நடக்கும் ஜவஹர்லால் நேரு மைதானத்தை பிரதமர் மன்மோகன் சிங் இன்று (ஆக.29) பார்வையிட்டார்.

அக்டோபர் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடக்கவுள்ளது. 1982ம் ஆண்டு நடந்த ஏசியாட் போட்டிகளுக்கு பிறகு இந்தியாவில் நடக்கவிருக்கும் மிகப் பெரிய விளையாட்டு போட்டிகள் இதுவே. இந்நிலையில், காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதில் நடந்திருக்கும் பல்வேறு முறைகேடுகள் அண்மையில் வெளிவந்தன. இது சர்வதேச அளவில் இந்தியாவுக்கு அவப்பெயரை பெற்றுத் தந்துள்ளது.

இதனையடுத்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் 2 வாரங்களுக்கு முன்பு அவசரக் கூட்டம் நடத்தப் பட்டது. அதில் காமன்வெல்த் போட்டிகளுக்கான பணிகளை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக முடிக்கும் படி பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டார். இந்தப் போட்டிகளை நடத்துவதற்கான பணிகளை துரிதப் படுத்த அமைச்சரவை செயலர் தலைமையில் அதிகாரிகள் குழுவும், ஜெய்பால் ரெட்டி தலைமையில் அமைச்சர் குழுவும் அமைக்கப் பட்டன.

இதற்கிடையே, இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு 900 கோடி ரூபாய் செலவில் தொடங்கப் பட்டு, இன்னும் முடிக்கப் படாமல் இருக்கும் ஜவஹர்லால் நேரு மைதானத்தின் புனரமைப்பு பணிகளை பிரதமர் மன்மோகன் சிங் இன்று (ஆக.29) மதியம் பார்வையிட்டார். அவருடன் காமன்வெல்த் போட்டிகளின் ஏற்பாடு குழுவினரும் உடனிருந்தனர்.

ஜவஹர்லால் நேரு மைதானத்தில்தான் காமன்வெல்த் போட்டிகளின் தொடக்க விழாவும், ஆட்ட நிறைவு விழாவும் நடக்கவிருக்கின்றன.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

26 December 2011, 19.35 செய்திகள்
பிரதமருடன் கருணாநிதி சந்திப்பு : கனிமொழி உடனிருந்தார்
சென்னை: தமிழகம் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை, திமுக தலைவர்...மேலும்...
0 Comments , 215 Hits
23 March 2012, 17.56 செய்திகள்
லோக்பால்: அனைத்து கட்சிக் கூட்டம் தோல்வி
புதுதில்லி: வலிமையான லோக்பால் சட்டம் கொண்டு வருவது தொடர்பாக பிரதமர்...மேலும்...
0 Comments , 53 Hits
19 May 2012, 19.31 தலைப்புச் செய்திகள்
காவிரி நீர்: கர்நாடக அரசு மீது ஜெயலலிதா பாய்ச்சல்
சென்னை: காவிரி நதி நீரை தமிழகத்தின் பங்கை தராமல் கர்நாடகா அணைகளில்...மேலும்...
0 Comments , 5 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits