பாட்னா: உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக முதலமைச்சர்கள் மாநாடு பிரதமர் தலைமையில் நடந்து வரும் நேரத்தில், பீகார் மாநிலத்தில் மாவோயிச தீவிரவாதிகள் தண்டவாளத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்துள்ளனர்.
முன்னதாக, கோல்கத்தாவில் நடைபெற உள்ள 4 மாநில முதல்வர் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து 72 மணிநேர முழு கடையடைப்பிற்கு மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்திருந்தனர். முழு அடைப்பு போராட்டத்தை தொடங்கி விட்டோம் என்பதற்கு அடையாளமாக மாவோயிஸ்டுகள் இந்த
தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர்.
நர்கோஜோ பகுதியில் உள்ள தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இதனால் ஹவுரா-தில்லி இடையேயான ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,பிப்ரவரி 9ம் தேதியன்று மேற்வங்கத்திற்கு வருகை புரிவதாக இருந்த மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் பயணமும், பாதுகாப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|



