கோவை: பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தாலும் தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கோவையில் 5 நாட்களாக நடைப்பெற்று வந்த உலக செம்மொழி மாநாடு நேற்று (27/06/2010) நிறைவடைந்தது. அதனால் அதற்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி செலுத்தும் நோக்கோடு செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் முதல்வர் கருணாநிதி. செம்மொழி மாநாட்டில் கலந்துக் கொண்டு சிறப்பித்த குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில், தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா ஆகியோருக்கும் விழாவில் கலந்துக் கொண்ட அனைத்து தமிழறிஞர்களுக்கும் பொது மக்களுக்கும் நன்றித் தெரிவித்துக்கொண்டார்.
மேலும் அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு - பெட்ரோல் டீசல் விலையுயர்ந்திருப்பதால் தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ. 150 கோடி நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது. இருந்தப்போதிலும் மக்கள் நலன் கருதி பேருந்து கட்டணம் உயர்த்தப் படமாட்டாது.
உங்களில் ஒருவராக இருக்க விரும்புகிறேன் - செம்மொழி மாநாடு முடிந்ததும் உங்களில் ஒருவராக இருக்கப் போகிறேன் எனக் கூறியிருந்தீர்களே என செய்தியாளர்கள் கேட்டதற்கு அதற்கு ஓய்வுப் பெறப் போவதாக அர்த்தமில்லை. இருப்பினும் நான் ஓய்வுப் பெற வேண்டும் என நீங்கள் கூறினால் நான் ஓய்வெடுக்கிறேன் எனவும் கூறினார்.
தமிழக சட்டமன்றத்துக்கு முன்கூட்டியேத் தேர்தல்? - உலக செம்மொழி மாநாடு சிறப்பாக நடைப்பெற்றிருக்கும் இவ்வேளையில் தேர்தல் முன்கூட்டியே நடத்துவதுக் குறித்துப் பேசத் தேவையில்லை.
இவ்வாறு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




