புதுதில்லி: பாராளுமன்ற கட்டிடத்தை தாக்கிய தீவிரவாதி அஃப்சல் குருவின் கருணை மனுவை நிராகரிக்க கோரி குடியரசு தலைவருக்கு மத்திய அரசு பரிந்துரை செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
9 ஆண்டுகளுக்கு முன் பாராளுமன்ற கட்டிடம் தீவிரவாதிகளால் தாக்கப் பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அஃப்சல் குரு கைது செய்யப் பட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. இந்த தண்டனை அளிக்கப் பட்டு பல ஆண்டுகள் ஆகியும் தண்டனை இன்னும் நிறைவேற்றப் படாமல் உள்ளது.
இதற்கிடையே, அஃப்சல் குருவின் தண்டனையைக் குறைக்க கோரி, அஃப்சல் குருவின் மனைவி தபசும் குடியரசு தலைவரிடம் கருணை மனு ஒன்றையும், 4 ஆண்டுகளுக்கு முன் அளித்திருந்தார். இதன் மீதும் முடிவு எதுவும் எடுக்கப் படாமல் காலம் தாழ்த்தப் பட்டு வருகிறது.
இந்நிலையில், அஃப்சல் குருவின் கருணை மனுவை நிராகரிக்க, மத்திய உள்துறை அமைச்சகம், குடியரசு தலைவரிடம் பரிந்துரைக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கான கோப்பை, உள்துறை அமைச்சகம், பிரதமர் அலுலலகத்துக்கு அனுப்பும். அங்கிருந்து, ராஷ்டிரபதி பவன் அனுப்பப் படும் என தெரிகிறது.
மத்திய அரசின் பரிந்துரை கடிதம் இன்னும் குடியரசு தலைவரிடம் வரவில்லை என ராஷ்டிரபதி பவன் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





